ஆசிரியர்களுக்குஅரசு மிரட்டல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2015

ஆசிரியர்களுக்குஅரசு மிரட்டல்.

ஜேக்டோ கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டத்தில், விடுப்பு எடுத்துபங்கேற்றால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜேக்டோ' கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளன.


இக்குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்து மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் துவக்கி வைக்க, தமிழக காங்.,தலைவர் இளங்கோவன் முடித்து வைக்கிறார். முக்கிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், 'ஜியோ' அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி உட்பட பல மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று வேலை நாள் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர்கள் யாரும், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். 'பள்ளிவேலை நாளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்கமும் வலியுறுத்தி உள்ளது. அச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறும் போது, ''இதுகுறித்து, முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி, கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். போராட்டத்தால், மாணவர்களின் கல்விப் பணி பாதிக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி