தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், 2011ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது. 10ம் வகுப்பு படித்த, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும்; 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படுகிறது.பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும்; 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்பித்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்குவார்கள்.2011 - --12ம் நிதியாண்டில், 1 லட்சத்து, 19 ஆயிரம் பேருக்கு,தங்கம் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
2012 - 13ல், 1 லட்சத்து, 48 ஆயிரம்; 2013 - 14ல், 1 லட்சத்து, 37 ஆயிரம்; 2014 - 15ல், 1 லட்சத்து, 42 ஆயிரம் என, இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.ஏழைப் பெண்கள், திருமணத்தின் போது கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத் தான், அரசு இந்தத் திட்டத்தைத் துவங்கியது. திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவது ஒருபக்கம் இருந்தால், எதிர்பாராத புதுப்பலன் ஒன்றும் இந்தத் திட்டத்தால் கிடைத்துள்ளது.இந்த திட்டத்தின் பலன் பெறுவதற்காக, கிராமங்களில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல், 10ம் வகுப்பு முடிப்பதற்கு முன், பள்ளியை விட்டு பாதியில் நிறுத்துவதும்குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கிராமப்புற பள்ளிகளில் பெண் குழந்தை சேர்க்கை, 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி