மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2015

மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.

புதுடெல்லி: மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியமனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் தினம் வருவதையொட்டி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்களை மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணையும் படி ஊக்கு விக்க வேண்டும். மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.


அண்மையில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரதமர் சுரக்‌ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றில் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் இணையும் வகையில் ஊக்கு விக்க வேண்டும். செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் அன்றைய தினம் அனைத்து ஆசிரியர்களும் இதில் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி