அகில இந்திய வானொலியான மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பூங்கா நிகழ்ச்சி !மதுரை வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவானது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2015

அகில இந்திய வானொலியான மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பூங்கா நிகழ்ச்சி !மதுரை வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவானது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் பூங்கா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒலிபதிவு நடைபெற்றது.

மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தினர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர்.1ம் வகுப்பு மாணவி திவ்ய ஸ்ரீ கணக்கு பாடலையும், 2ம் வகுப்பு மாணவி அம்மு ஸ்ரீ மூத்தோர் சொல்லை மதிக்கணும் என்கிற பாடலையும், 3ம் வகுப்பு மாணவி ஜன ஸ்ரீ கவிதையும், 5ம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் திருக்குறளை கதையாகவும் ,6ம் வகுப்பு மாணவன் ரஞ்சித் நாம் உண்ணும் உணவின் பெயர்களை தமிழ் பெயர்களாகவும் ,உண்மையை சொல் என்கிற நாடகத்தை முத்தழகி,ஜீவா,தனம் ஆகிய மாணவர்கள் பங்கேற்று நடிக்கவும் , எதனாலே,எதனாலே என்கிற அறிவியல் பாட்டை 8ம் வகுப்பு மாணவர் வசந்தகுமார் பாடவும்,சுற்று சுழலை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான விசயங்களை வில்லு பாட்டு மூலமும்,முத்து சிதறல் என்கிற தலைப்பில் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்க கூடிய தகல்வகளையும் மதுரை வானொலி நிலையத்தினர் மாணவ,மாணவியரிடம் அன்புடன் பேசி சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்கு பேட்டி எடுத்து ஒலிபதிவு செய்தனர். நிகழ்ச்சிகளை 8ம் வகுப்பு மாணவி தனம் தொகுத்து வழங்கினார்.

மாணவ,மாணவியரும் வானொலியில் பேச போவதை எண்ணி மகிழ்ச்சியாக பேசினார்கள். மாணவ,மாணவியர் பேசுவதற்கு ஆசிரியைகள் முத்து மீனாள் ,செல்வ மீனாள் ஆகியோர் பயற்சி அளித்தனர். இவர்களை ஆசிரியை வாசுகி,கலாவல்லி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வானொலி நிலையம்,அதன் ஒலி பதிவு அறை , ஒலி பதிவு செய்யும் விதம் ஆகியவற்றை வாழ்கையில் முதன் முறையாக கண்டு மாணவ,மாணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சி இம்மாதம் எட்டாம் தேதி மதியம் 2.30 மணி அளவில் மதுரை வானொலியில் ஒலி பரப்பாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்கு ஒலி பதிவுக்கு சென்ற போது எடுத்த படம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி