மாசம் பொறந்தா சம்பளம் கேட்கிறார்கள் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2015

மாசம் பொறந்தா சம்பளம் கேட்கிறார்கள் ஆசிரியர்கள்

மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அரசு ஆணை பிறப்பித்த பின், ஊதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


மத்திய அரசு நிதி:மத்திய அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றை, தமிழக பள்ளிக்கல்வித் துறை வழியே செயல்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆசிரியர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டு, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்பில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதேபோல், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளும், இந்த திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதன் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஊதியம் வழங்கப்படுகிறது.அரசாணை:ஆனால், அந்த பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படாமல், ஒரு மாதம்முதல் ஆறு மாதங்கள் வரை, அவ்வப்போது புதுப்பிக்கப்படும் வகையில் உள்ளன. எனவே, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், தனியாக அரசாணை பிறப்பித்த பின், கருவூலத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த அரசாணையை பிறப்பிக்க, ஒவ்வொரு மாதமும் காலதாமதம் ஏற்படுவதால், ஊதியம் வழங்குவதும் தாமதமாகிறது.


தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவு ஆசிரியர்களுக்கு, கடந்த மாத ஊதியம், நிறுத்திவைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.தமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''மாதம் துவங்கும் முன், உரிய முறையில் ஆணை பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி