மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு தலைமையாசிரியர் ஒருவரும், மற்றொரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ளனர்அருப்புக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 85 பள்ளிகள் உள்ளன.


இவற்றில் 37 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள், 7 நடு நிலைபள்ளிகளும், 41 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளும் உள்ளன. ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் போதிய கட்டடம், கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.சமச்சீர் கல்வி மூலம் பாடங்கள் சொல்லி தரப்படுகின்றன. புதிய பாட திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி கொடுக்கப்படுகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். ஒரு கி.மீ., துாரத்தில் அடுத்தடுத்த பள்ளிகள் இருப்பதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 5 ம் வகுப்பில் ஒரு மாணவன், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி என 2 மாணவர்கள் தான் உள்ளனர். இவர்களுக்கு 2 ஆசிரியர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த பள்ளி நடக்குமா என்பது கேள்வி குறியாக உள்ளது. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை இல்லை.


பந்தல்குடி ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மட்டும் தினம் வந்து செல்கிறார். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சக்திவேல், “மாணவர்கள் குறைவாக உள்ளபள்ளியில் 2 ஆசிரியர்களில் ஒருவர் வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவார்.மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மூடப்படும்,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி