தொலைநிலைக் கல்வி இளநிலைப் பட்டத் தேர்வு முடிவு இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

தொலைநிலைக் கல்வி இளநிலைப் பட்டத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு 2015 மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஆக. 14) வெளியிடப்பட உள்ளன.தேர்வு முடிவுகளை


www. ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய பல்கலைக்கழக இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.நடப்பு ஆண்டு மாணவர்கள் தேர்வு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்குதாள் ஒன்றுக்கு ரூ. 1,000 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லாத மாணவர்கள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 300 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த இரண்டுக்கும் தொலைநிலைக் கல்வி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24 கடைசித் தேதி என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி