இயற்கையான அறிவுத் திறனும், படைப்பாற்றலும் அரசுப் பள்ளி களில்தான் வெளிப்படுகின்றன என்று நடிகர் விவேக் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி கிராமத்தில் சுதந்திர தின விழா, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் விழா, பொதுமக்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் பேசியது:
2010-ல் என்னிடம் பேசிய அப்துல் கலாம், “உலகம் வெப்பமய மாகி வருகிறது. நிறைய மரங்களை வெட்டிவிட்டனர். இதனால் பெரும் ஆபத்து வரவுள்ளது.மரங்கள்தான் மழையைத் தருகின்றன. நிலத்தடி நீர், இலைகள் வழியாக நீர்சுழற்சிமூலம் மழையாகப் பொழிகிறது. இதுகுறித்து மாணவர்களுக்கு விளக்குங்கள்” என்றார்.அதன்படி நான் மாணவர்களிடம் பேசி வருகிறேன். மேலும், தமிழகத் தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி, இதுவரை 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள் ளோம். எனவே, அனைவரும் மரக் கன்றுகளை நடும் பணியில் ஈடுபட வேண்டும்.அரசுப் பள்ளிகளை போற்றிப் பாதுகாக்க வேண்டும். அங்குதான் மாணவர்களின் இயற்கையான அறிவுத் திறனும், படைப்பாற்றலும் வெளிப்படுகின்றன. ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற னர்.
புகழ்பெற்ற மேதைகள், அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் அரசுப் பள்ளிகளில் உருவானவர்கள்தான்.மனிதனின் ஆதி தொழில் விவ சாயம். இந்தியாவைப் போலவே சீனாவும் முழுமையான விவசாய நாடுதான். அவர்களின் பொருட்கள் உலகத்தையே ஆட்சி செய்தாலும், அவர்கள் விவசாயத்தை மதித்து செய்கின்றனர். ஆனால், நம் நாட்டில் விவசாயத்தைஇழிவாகக் கருதுகிறோம். இந்நிலை மாற வேண்டும். மாணவர்கள் விவசா யத்தை நாடி வர வேண்டும். உணவு உற்பத்தியை அதிகரிக்க அறிவுத் திறனை பயன்படுத்த வேண்டும்.விளைநிலங்கள், ஏரி, குளங் களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுகின்றனர். அவற்றுக்கு அப்துல் கலாம் பெயரை வைக் கின்றனர். உண்மையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த நினைத்தால், ஒவ்வொருவரும் 10 மரக்கன்றுகளை நட்டு வளருங்கள் என்றார்.தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் பேசும்போது, “பசுமை என்பது மரத்தில் மட்டுமல்ல. எண்ணத்தி லும் இருக்க வேண்டும். முன்பு மன்னார்குடியில் ஏராளமான செடி கள் இருந்தன. இப்போது, ஒன்றை கூட காண முடியவில்லை.
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்து வருகிறோம்.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது நகைச்சுவையைப் பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மனதில் பாடம் ஆழமாகப் பதியும். காவிரி நீர் உரி மையில், சட்டரீதியாக அனைத்து வழக்குகளிலும் தமிழகம் வெற்றி பெற்றுவிட்டது.ஆனால், உரிய தண்ணீர் வரவில்லை.தமிழக அரசியல் கட்சிகளுக் கிடையே ஒற்றுமை இல்லாததே இதற்குக் காரணம். பொதுப் பிரச்சினைகளிலாவது அரசியல் பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றார்.விழாவுக்கு, வடசேரி பசுமை இயக்கத் தலைவர் தாம்பரம் நாரா யணன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் முத்து ராஜேந்திரன், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ரமேஷ், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் பு.க.ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்றவடசேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தங்க நாணயங்களும், பொது மக்களுக்கு பழ மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி