திண்டுக்கல்லில் நேற்று நடந்த தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் சீனியாரிட்டியில் குளறுபடி இருப்பதாக கூறி ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.இந்த கவுன்சிலிங் திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
வயதுவந்தோர் கல்வி இணை இயக்குனர் சுகன்யா தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். காலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங் நடந்தது.பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது.
சாணார்பட்டி அருகே கணவாய்ப்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமுதாவிற்கு சீனியாரிட்டி வழங்கவில்லை என கூறி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தலைமையில் ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.பின் சீனியாட்டியில் ஆசிரியரின் பெயர் சேர்க்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிட்டனர். இரண்டு கவுன்சிலிங்கிலும் 23 பேருக்கு இடமாறுதல் உத்தரவும், 26 பேருக்கு பதவிஉயர்வு உத்தரவும் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி