இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்புக்கு, குறைந்த திறன் குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, 'காம்பக்ட் புளோரசன்ட்' என்ற 'சி.எப்.எல்., பல்பு', 15 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டது.தமிழகத்தில், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், 2010ல், 1,500 வீடுகளுக்கு, 'சி.எப்.எல்., பல்பு'கள் வழங்கப்பட்டன. பின், மின் வாரியம் சார்பில், இலவச மின் இணைப்பு உள்ள, குடிசை வீடுகளுக்கு, ஒரு சி.எப்.எல்.,பல்பு இலவசமாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாதாரண குண்டு பல்பு, 60 வாட்ஸ்; சி.எப்.எல்., 15 வாட்ஸ்; எல்.இ.டி., ஏழு வாட்ஸ் ஆகியவற்றின் மூலம் ஒரே வெளிச்சம் தான் கிடைக்கும்.மின் நுகர்வோரிடம், 10 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு, 'எல்.இ.டி., பல்பு' வழங்கலாமா அல்லது மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள, 130 ரூபாய்க்கு, 12 தவணைகளில் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மானிய விலையில், ஒருவருக்கு, நான்கு எல்.இ.டி., பல்பு வழங்கும் திட்டத்தை, சட்டசபை மானிய கோரிக்கையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி