இளங்கலை பட்டப் படிப்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு பாடம்: அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2015

இளங்கலை பட்டப் படிப்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு பாடம்: அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு

இளங்கலை பட்டப் படிப்பில் நாட்டு நலப்பணி திட்டம் (என்எஸ்எஸ்) பற்றிய பாடத்தை ஒரு தெரிவு பாடமாக சேர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.கல்லூரிகளில் பட்டப் படிப்பில் சேரும் மாணவர்கள் விருப்பப் பட்டால் தேசிய மாணவர் படை (என்சிசி), நாட்டு நலப்பணி திட்டம் (என்எஸ்எஸ்) என படிப்பை தாண்டிய இதர செயல்பாடுகளில் சேரலாம். என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களுக்குப் பயிற்சிகளுடன் அவ்வப்போது வெளியிடங்களில் முகாம்களும் நடத்தப்படும்.


மேற் படிப்பு மற்றும் அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வின்போது என்சிசி, என்எஸ்எஸ் ஈடுபாடுகளுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படுகிறது.இந்த நிலையில், மத்திய மனித ஆற்றல் மேம்பாடு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் என்எஸ்எஸ் எனப்படும் நாட்டு நலப்பணி திட்டம் பற்றிய பாடத்தை தெரிவு பாடமாக (Elective Subject) சேர்க்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது. இதற்கான பாடத் திட்டத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உருவாக்கியிருக்கிறது.

ஆளுமை வளர்க்கும் அம்சங்கள்

அதில், என்எஸ்எஸ் தோற்றம், அமைப்பு முறை, மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள், இளைஞர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள், சமூக மாற்றம் மற்றும் நாட்டு முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு, தலைமைப் பண்பு, தகவல் தொடர்புகொள் ளும் திறன், அமைதியை ஏற்படுத் துவதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இளைஞர்களின் பங்களிப்பு, இந்திய அரசியல் சாசனம், மனித உரிமைகள், மனித மதிப்பீடுகள், முதலுதவி, யோகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில் முனைவு, குற்றங்கள், சமூக குற்றங் கள், இணையவழி குற்றங்கள் தடுப்பு, தன்னம்பிக்கை வளர்த்தல், இலக்கை உருவாக்குதல்,தலை மைப் பண்பு, நேர மேலாண்மை என இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்க்கும் வகை யில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த பாடத்திட்டம், செமஸ்டர் கள் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. கருத்தியல்தேர்வுக்கு (தியரி) 60 மதிப்பெண்ணும், புராஜெக்ட் மற்றும் செய்முறைத் தேர்வுக்கு 40 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள் ளது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள என்எஸ்எஸ் தொடர்பான பாடத்தை நடப்பு கல்வி ஆண்டிலேயே தெரிவு பாடமாக இளங்கலை படிப்பில் சேர்க்குமாறு அனைத்து பல் கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய என்எஸ்எஸ் பாடத்திட் டம் குறித்து சென்னை பல்கலைக் கழக என்எஸ்எஸ் திட்ட ஒருங் கிணைப்பாளர் ஜி.பாஸ்கரனிடம் கேட்டபோது, “இந்த புதிய திட்டம் சமூக சேவைகள் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளு மைத் திறனையும் மேம்படுத்துவது டன் அவர்களின் பல்வேறு ஆற்றல் களை உரிய பாதையில் நெறிப்படுத் தவும் பெரிதும் உதவும். தற் போதைய கல்வி முறையில் மாண வர்கள் பாடம் சார்ந்துதான் அனைத்தையும் அணுகுகின்றனர். என்எஸ்எஸ் திட்டத்தில் பங்கெடுப் பதால் அவர்கள் தங்கள் திறமை களை அறிந்துகொள்வதுடன், சமூக நலன் குறித்தும் சிந்திப்பார்கள்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி