TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2015

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி,


தமிழகத்தில், 2010ல், டெட் தேர்வுக்கான நடைமுறைகள் துவங்கின. அப்போதைய, தி.மு.க., ஆட்சியில், டெட் தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் கள் நியமனம் நடந்தது.டெட் தேர்வு நடத்தாவிட்டால், ஆசிரியர்களுக்கு தரப்படும், 50 சதவீத ஊதிய மானியம் கிடைக்காது என, மத்திய அரசு எச்சரித்தது. அ.திமு.க., ஆட்சிக்கு வந்ததும், 2012 முதல் டெட் தேர்வு கட்டாயம் எனவும், தேர்வில், 150க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது.

வழக்கு:

முதல் தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது. அதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதி, 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணி நேரத்திலிருந்து, மூன்று மணி நேரமாக மாற்றி, மறுதேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது.பின், 2013 ஆகஸ்டில், இரண்டாவது டெட் தேர்வு நடத்தி, தேர்ச்சிப் பட்டியல் வெளியான நிலையில், முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்ற வகுப்பினருக்கு, 5 சதவீதமதிப்பெண் தளர்வை அரசு அளித்தது.இதனால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, 7,500 பேருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, 82 மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெற்றனர். பாதிக்கப்பட்டோர், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்குகளில், இரண்டு இடங்களில் இரு வித தீர்ப்பு வந்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களும், மதிப்பெண் சலுகை பெற்றவர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் தான், தமிழக அரசு விழித்துக் கொண்டு, மேல்முறையீடு மனுவை தாக்கல்செய்துள்ளது.இந்த பிரச்னைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய, நான்கு, டெட் தேர்வுகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தவில்லை. இதனால், ஆசிரியர் பணியை நம்பி, பி.எட்., மற்றும் டி.எட்., படித்த ஏராளமானோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

கட்டாயம்:

தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேரவும், டெட் தேர்வு கட்டாயம் என்பதால், டெட் தேர்வு எழுத முடியாத, ஏற்கனவே தேர்ச்சி பெறாதோர், குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பல்வேறு படிப்புகளை முடித்து விட்டு பணிக்காக காத்திருக்கும், 90 லட்சம் பேரில், எட்டு லட்சம் பேர், ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள்.

இதுகுறித்து, தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக் கழகத்தின் தலைவர், ஆர்.செல்லதுரை கூறியதாவது:அரசு சரியான கொள்கை முடிவு எடுக்காததாலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்காததாலும், டெட் தேர்வு அறிவிப்பு கானல்நீராகிவிட்டது.அதனால், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், தனியார் பள்ளிப் பணிக்கு செல்லக்கூட முடியாத சூழல் உள்ளது. மேலும், ஏற்கனவே அரசு அறிவித்தபடி, 90 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கூட, வேலைவாய்ப்பை வழங்காதது வேதனைக்குரியது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு உத்தரவிட்டால், எப்போது வேண்டுமானாலும் டெட் தேர்வு நடத்தத் தயாராக உள்ளோம்,' என்றனர்.

8 லட்சம் பேர் யார்?

கடந்த முறை 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற முடியாத, 6 லட்சம் பேர், கடந்த, இரண்டு ஆண்டுகளில் பி.எட்., முடித்து உள்ள, 1.8 லட்சம் பேர்,டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்த, 20 ஆயிரம் பேர் என, 8 லட்சம் பேர் காத்து இருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்கள், டெட் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

ஆசிரியர்கள் சொல்வது என்ன?

''டெட் தேர்வு குறித்து, தமிழக அரசு நிபுணர் குழு அமைத்து விரைவில் முடிவெடுக்க வேண்டும். ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். ஆண்டுதோறும், ஆசிரியர் காலியிடங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தரம் உயரும் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் என, மூன்று வகைகளில், ஆண்டுக்கு, 10 ஆயிரம் இடங்கள் காலியாகின்றன. இவற்றில் காத்திருப்பில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும். இதைவிட்டு, அரசு,இலவச திட்டங்களில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிறது.

15 comments:

  1. AppppppppppppA...varudathuku 10000 gaali paniyidama? Apadina 2 varudathil 20000 paniyidam gaaliyaga irukanumey.apuram epadi pa 5000 surplus vandhuruku.

    Thervu eludhatha 8latcham peruku thervu nadatha mudivu edukum t.r.b yen pa already pass pani wait panitu iruka 60000 perai kandukavey matenadhu.

    Vena tet nadathatum.avargalukt thevai thagudhi sandridhal thana!

    Posting engala vechu podatum. 100 kutravali thapikalam.but 1nirabarathi kooda badhika pada koodathu.

    ReplyDelete
    Replies
    1. உலகில் பேசப்படும் / பேசப்பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்



      உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.

      உலகில் பேசப்படும் / பேசப்பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் (Top 10 Oldest Languages in the World)


      சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

      10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

      ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

      9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

      இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

      8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

      கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

      7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

      இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

      6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

      அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

      5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

      சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

      4 வது இடத்தில் கிரீக் (Greek)

      கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

      3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

      ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

      2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

      இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

      1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

      5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

      தகவல் உதவிக்கு நன்றி: Rajeeshan Shanmugalingam

      Delete
  2. விரைவில் டெட் வரவுள்ளது நம்பிக்கையுடன் இருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.விரைவில் வரவுள்ளது அடுத்த வருடம்.

      Delete
  3. Neeinga trb chairman na valai peruinga pa thericha solluinga illai viduinga bro

    ReplyDelete
  4. Neeinga trb chairman na valai peruinga pa thericha solluinga illai viduinga bro

    ReplyDelete
  5. 30 % ஆதி திராவிடர் இடைனிலை ஆசிரியர் வழக்கு முடிந்து விட்டதா?


    sgt adw case end?

    ReplyDelete
  6. JJ is slowly closing govt schools. What is the need of TET. Private schs do not ask eligiblity.

    ReplyDelete
  7. l am not ready to waate my time

    ReplyDelete
  8. l am not ready to waate my time

    ReplyDelete
  9. l am not ready to waate my time

    ReplyDelete
  10. Next yenna examthan varapoguthu? Tet or pg trb ya? Yentha examku prepare pandrathu?

    ReplyDelete
  11. Tet 90 mbc maths any aided school vacancy. Please help me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி