கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2015

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

20 comments:

 1. வரலாற்று உண்மை மறைக்கப்பட்டதா?
  ================
  இந்தியா 69 வது சுதந்திரத்தை சிறப்பாக கொண்டாடு இவ்வேலையில் உண்மையான சுதந்திரப்போராட்டம் என்பது மறைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது வட இந்தியாவில் ஏற்பட்ட போராட்டம் மட்டுமே சுதந்திரபோராட்டம் அல்ல தமிழகத்தில் 17 ம் நூற்றாண்டிலே ஆங்கிலேயரை எதிர்த்த போராட்டம் எண்ணிலடங்கா வரலாற்று ஆசிரியர் அனைவரும் வட இந்தியாவை சார்ந்தவர்களாக இருந்ததால் என்னவோ தமிழகபோராட்டம் அதிகம் இடம் பெறவில்லை.சிப்பாய் கலகம்,முதல் இந்திய சுதந்திர போராட்டமாக அறிவிக்கப்பட்டது அப்படியென்றால் மாவீரன் பூலித்தேவனும்,கட்டபொம்மனும்,மருது சகோதரர்களும் செய்த போராட்டம் என்ன? இல்லை வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா? முதல் இந்திய சுதந்திரப்போர் வெடித்தது தென்தமிழகத்தில்தான் வரலாற்று ஆய்வுகளும் இதையே கூறுகிறது. எனினும் அதைப்பற்றிய மக்கள் பார்வையில் தமிழகப்போராட்டம் மறைக்கப்ட்டதாகவே என்ன தோன்றுகிறது.எது எப்படி இருப்பினும் இந்திய சுதந்திரம் என்பது கேட்டவுடன் கிடைத்ததில்லை அதற்காக உயிர் நீத்த வீரர்கள் பலர் அவர்களின் உயிரின் விலை தான் நாம் அனுபவிக்கும் சுதந்திரம் தயவு செய்து அடுத்த தலைமுறைக்கு நாம் சுதந்திரத்தின் மாண்பை எடுத்துக்கூற வேண்டும்.சுதந்திரத்தை போற்றுவோம்!!!
  சுதந்திரத்தை காப்போம்!!!
  -பாலன் ராமநாதன்

  ReplyDelete
  Replies
  1. 69-வது சுதந்திர தின நல் வாழ்த்துகள்

   Delete
  2. ***கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

   ***இன்னுமொரு 50 வருடங்கள்
   கழித்து வாங்கியிருக்கலாம்...

   ***அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
   அத்தனை நதிகளையும்
   இணைத்துவிட்டிருப்பான்
   அந்த வெள்ளைக்காரன்,
   நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

   ***நாடு முழுவதும் எப்போதோ
   bullet rail வந்திருக்கும்,
   நாம் இப்போது தான் மீட்டர்
   கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

   ***ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
   வெள்ளைக்காரன்,
   நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

   ***நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
   கட்டப்பட்ட ஆயிரக்கணக்
   கட்டிடங்களும் பாலங்களும்
   அணைகளும் அப்படியே இருக்க
   முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

   ***நாட்டிற்கு வருமானத்தை தரும்
   சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
   வெள்ளைக்காரன்!

   ***பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
   கல்விமுறை வந்திருக்கும்!
   நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
   இடஒதுக்கீட்டுக்கும்
   போராடிக்கொண்டு இருக்கிறோம்!

   ***வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
   அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
   வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
   கொண்டிருக்கிறது,
   அடித்து வாங்க சக்தியில்லாமல்
   அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

   ***மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
   வாங்கினோம் மக்களுக்கு வாங்க
   தவறிவிட்டோம் !

   ***120 கோடி மக்கள் தொகையில்
   70 கோடி வறுமைக்கு கீழ்!
   பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
   70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
   இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
   பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

   ***எப்படி குத்திக்கொள்ளமுடியும்
   கொடியை,
   ஒவ்வொரு முறை குத்தும்போதும்
   இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

   ***நம்நாட்டு பெண்களை கூட்டம்
   கூடி கற்பழிக்கும் வரை,
   நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
   நின்று பிச்சைகேட்கும் வரை,
   நம்நாட்டு பெண்சிசுக்கள்
   கள்ளிப்பாலில் சாகும்வரை
   நமக்கெல்லாம் அருகதையில்லை

   ***சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
   ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
   அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
   மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
   என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!!!

   Delete
  3. நண்பரே இவையெல்லாம் நடந்திருக்கலாம் என்பது அனுமானம் தானே!
   உங்களால் இத்தனை தேரியமாக இதை எழுத வைத்ததே இந்திய விடுதலை என மறக்க வேண்டாம்!
   பசியிலும் பட்டினியிலும் ஆப்பிரிக்க நாடுகளைப் போன்று இந்தியா இருந்திருக்கும் என அறிவீர்களா?
   பல ஐரோப்பிய நாடுகளுக்கிணையான இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சிகளைப் பற்றி அறிவீர்களா?
   சில குறைகள் எங்கும் உண்டு.அதனால் இந்தியாவின் விடுதலையைப் பற்றி ஏளனமாக எண்ண வேண்டாம்.

   உங்களைப் போன்றே பட்டியலிட இயலும்.
   ஆசிரிய சமுதாயத்திலிருந்து கொண்டு இத்தகைய நாட்டைப் பற்றிய எதிர்மறை சிந்தனைகளை பரப்ப வேண்டாம்.
   இந்தியாவிற்கு இதனால் எந்த இழிவுமில்மை இந்தியாவில் பிறந்த உங்களுக்குத் தான் இழிவு.

   Delete
  4. இந்தியாவிற்கு இழிவு என்று நான் எந்த இடத்தில் கூறியுள்ளேன் ....

   அர்த்தம் தெரிந்தால் மட்டும் மாற்றுக் கருத்துக்களை பதிவிடவும்.....

   இந்தியாவில் பிறந்ததிற்காக நான் எப்போதும் பெருமையே அடைகிறேன் !!!!

   சுதந்திர உணர்வு எனக்கு உள்ளதால் தான் நான் இங்கே எனது பெயர் மற்றும் புகைப்படத்துடன் பதிவுகளை பதிவேற்றிக் கொண்டிருக்கிறேன்!!!!!


   உங்களின் மனதில் இன்னும் சுதந்திர உணர்வு வரவில்லை போலும் ..... அதனால் தான் தாங்கள் சுய பெயரை கூட கூறாமல் இங்கே பதிவுகளை செய்து உள்ளீர்கள் போல!!!

   எனது பதிவை நன்கு பார்க்கவும் நண்பரே!!!

   தவறு என இருந்து இருந்தால்... அது நமது கல்வி செய்தியின் அட்மின் அவர்களால் இந்த பதிவு உடனே நீக்கப்பட்டு இருக்கும் ....

   Delete
  5. யாதவ் சார், உங்களின் நாட்டுப்பற்று பற்றிய சிந்தனைகள் போற்றும் படியாக உள்ளது.

   Delete
 2. WISH YOU HAPPY INDEPENDENCE DAY BY PERI DHANUSH

  ReplyDelete
 3. Wish you happy independence day

  ReplyDelete
 4. Wish you happy independence day

  ReplyDelete
 5. Wish you happy independence day

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. 🇮🇳சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳

  💈🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳
  💈⬜⬜🌐⬜⬜
  💈🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
  💈 🌿
  💈 🌺
  💈 🌱 🌸
  💈 💐
  💈 🍃 🍀
  💈
  💈 🍁 🌺
  💈
  💈🍂 🍃 🍂
  💈 🌺
  💈 🌸
  🏨🏫
  🏨🏢🏫
  🏨🏢🏢🏢🏫

  🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳
  💛💙💜💚❤💗💛💙❤

  ReplyDelete
 8. சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. wish u happy independence day frnds.....

  ReplyDelete
 10. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துககள்!

  ReplyDelete
 12. Kidaythuvitte sudhandhuram kondaduvathe adhay peni kakkethan. Indhe kaliyukathildhan oru Abdul kalam uruvanar. Innum theriyadha kalamgal irukkirarhal. Naam nam karuthukkalay nam maanavar samuthayathil pathiya vaikkum Abdul kalam pondru paniyil iruppadharkku perumay padukirom

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி