பொருட்கள் உள்ளே; மாணவர்கள் வெளியே! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2015

பொருட்கள் உள்ளே; மாணவர்கள் வெளியே!

கோவை: தமிழக அரசின் நலத்திட்ட பொருட்களை, பள்ளிகளில் வைப்பதால் மாணவர்கள் வகுப்பறைகள் இன்றி அவதிப்படும் சூழல் எழுந்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு அரசு லேப்-டாப், சைக்கிள், வண்ண பென்சில், அட்லஸ் உள்ளிட்ட, 14 வகையான நலத்திட்ட பொருட்களை, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் வழங்கிவருகிறது.


அதே போல், பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில், சைக்கிள், லேப்-டாப் ஆகியவை கிடைத்தவுடன் வழங்காமல், அரசியல் தலைவர்கள் விழா எடுத்து வினியோகிக்கும் வரை, பள்ளி வகுப்பறைகளில் வைக்கப்படுகிறது.மாணவர்களுக்கு வழங்கவேண்டிய, லேப்-டாப், சைக்கிள் ஆகியவற்றை பாதுகாப்பதே பெரும் சவாலாக இருக்கும் சூழலில், மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுவதால், பல்வேறு சிக்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது.ராஜவீதி, ஒண்டிபுதுார் ஆண்கள் போன்ற அரசு பள்ளிகளில் போதிய இடவசதி இருப்பதால் வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சில மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் இடவசதிகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமரவேண்டிஉள்ளதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர் நலச்சங்க உறுப்பினர் மோகன் கூறுகையில், ''அரசு பள்ளிகளில் இடமுள்ளதுஎன்பதற்காக, வகுப்பறைகளை குடோன் போல், பொருட்களை அடைத்துவைப்பது சரியல்ல. சிலபள்ளிகளில் இடமில்லாமல் மாணவர்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நலத்திட்ட பொருட்கள், சைக்கிள், லேப்-டாப்பாக இருந்தாலும், மிக்சி, கிரைண்டராக இருந்தாலும் கிடைத்தவுடன் வினியோகிக்கவேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி