மருத்துவம் சார் பட்ட படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2015

மருத்துவம் சார் பட்ட படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. 150 சுய நிதி கல்லுாரிகளையும் சேர்த்து, மொத்தம், 8,000 இடங்கள் உள்ளன.


இந்த படிப்புகளுக்கு, 19,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், இன்று துவங்குகிறது.


இன்று காலை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின்குழந்தைகளுக்கான கலந்தாய்வும், பிற்பகலில், பொது பிரிவுக்கான கலந்தாய்வும் துவங்குகிறது.'வரும், 27ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும்; மேலும் விவரங்களை, www.tn.gov.in, www.tnhealth.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி