அரசு ஊழியர்கள் வாங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

அரசு ஊழியர்கள் வாங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள்

அரசு ஊழியர் வீடு கட்ட, அரசிடம் பெறும் கடனுக்கு, குறைந்தபட்சம், 5.50சதவீதம்; அதிகபட்சம், 10 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.நடப்பு நிதியாண்டு, அரசு வழங்கும் கடன்களுக்கான, வட்டி விகிதம் விவரம் குறித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, அரசு ஊழியர், வீடு கட்ட, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றால், 5.50 சதவீதம்; 50 ஆயிரத்தில் இருந்து, 1.50 லட்சம் வரையிலான கடனுக்கு, 7 சதவீதம்; 1.50 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு, 9 சதவீதம்; 5 லட்சம் ரூபாய்க்கு மேல், கடன் பெற்றால், 10 சதவீதம், வட்டி வசூலிக்கப்படும்.


கார் வாங்க, கடன் பெற்றால், 11.50 சதவீதம்; இருசக்கர வாகனங்களுக்கு, 9 சதவீதம்; சைக்கிள் வாங்க, 5.50 சதவீதம்; கம்ப்யூட்டர் வாங்க, 10 சதவீதம்; இதர தேவைகளுக்கு கடன் பெற்றால், 10சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.


அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் பெற்றால், 11.50 சதவீதம் வட்டி;உணவுப் பொருள் வினியோகத்திற்கு கடன் பெற்றால், 10 சதவீதம்,பணி முதலீட்டிற்கான கடனுக்கு, 13.50 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் அபராத வட்டியாக, 2.50 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த அறிவிப்பு வரும் வரை, இந்த வட்டி விகிதம் அமலில் இருக்கும். அரசு விரும்பினால், வட்டியை ரத்து செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி