பள்ளிகளில் பொருட்காட்சி: தடை விதித்தது கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

பள்ளிகளில் பொருட்காட்சி: தடை விதித்தது கல்வித்துறை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், பொருட்காட்சி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், அந்தந்த பகுதிசார்ந்த வழிபாட்டுத் தல நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில், உள்ளூர் அமைப்புகள் சார்பில், பொருட்காட்சி நடத்தப்படுகிறது.


பொருட்காட்சியில், குழந்தைகளை கவரும் வகையில், ராட்டினம் உட்பட, பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. கடந்த மாதம், அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தில், சொக்கநாதர் கோவில் விழாவை யொட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டது; அதில், ராட்டினங்களும் இடம் பெற்றன.திடீரென ராட்டினம் உடைந்து, 12 வயது மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்து பலியானான்; இரண்டு பேர் காயம் அடைந்தனர்.இதுகுறித்து, விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி வளாகங்களில் பொருட்காட்சி நடத்த தடை விதித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு:பள்ளி வளாகங்களில், ராட்சத ராட்டினம் போன்ற சாதனங்களால், திடீரென விபத்து ஏற்பட்டு, மாணவ, மாணவியர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.

எனவே, வருங்காலங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான, பொருட்காட்சி அல்லது இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி