திரிசங்கு நிலையில் அரசு ஊழியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

திரிசங்கு நிலையில் அரசு ஊழியர்

தமிழகத்தில் 2003 ஏப்., 1க்கு பின் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 2006 ஜூன் 1 முதல் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.


இத்தொகையுடன், அரசின் பங்கையும் சேர்த்து மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஊழியர்களிடம் பிடித்தம்செய்த ரூ.5,000 கோடியும், அரசின் பங்கு தொகையும் இதுவரை ஆணையத்திடம் செலுத்தப்படவில்லை. இதனால் 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற, இறந்த ஊழியர், ஆசிரியர்கள் 1000 பேருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் முறையாக பணம் செலுத்தியதால் 7,000 பேருக்கு பணப்பலன் கொடுக்கப்பட்டுள்ளது.


இத்தகவல்களை திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ளார்.அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து இதுவரை ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மேலுாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே உயர்நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்றுள்ளார். மற்றவர்கள் வழக்கு தொடர முடியாமல் உள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி