தேவை ஒளிவுமறைவற்ற 'கவுன்சிலிங்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

தேவை ஒளிவுமறைவற்ற 'கவுன்சிலிங்'

இந்தாண்டு அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஒளிவுமறைவற்ற முறையில் நடக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் 'ஆன்லைன் கவுன்சிலிங்' ஆக.,12ல் துவங்குகிறது.


இதில் பங்கேற்க விரும்புவோரின் விண்ணப்பங்கள் ஜூலை 31 முதல் நேற்றுவரை பெறப்பட்டு 'ஆன்லைனில்' ஏற்றப்பட்டன.அதற்கு ஒப்புகை சீட்டு தரப்பட்டு சீனியாரிட்டி அடிப்படையில் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். இதனிடையே கவுன்சிலிங்கின்போது பல மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் உயரதிகாரிகளின் உத்தரவால் குறிப்பிட்ட சிலருக்காக மறைக்கப்படுவதாகவும், பின்னர் அந்த இடங்களில் அவர்கள் சேராததால்அவை கடைசிவரை காலியாக இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாகவும் ஆண்டுதோறும் புகார் கூறப்படுகிறது.


இதை தவிர்க்க ஒளிவுமறைவற்ற கவுன்சிலிங் நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,“இடமாறுதல் கவுன்சிலிங்கின்போது காலிப்பணியிடங்களை மறைக்காமல் வௌிப்படையாக காட்ட வேண்டும். இதன்மூலம் அவதி,குழப்பத்தை தவிர்க்கலாம். கவுன்சிலிங்கிற்கு பின் ஏற்படும் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இதற்கு பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.

3 comments:

  1. MUTUAL TRANSFER .B.T .TAMIL....SALEM dt .EDDAPADI TO NAMAKKAL DT ....pls contact= +91 98 42 482281... +91 95 78 263281.......

    ReplyDelete
  2. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

    ReplyDelete
  3. Iam suganthi maths bt thuvaranguruchi at thiruchy. Metual thiruchy to kangipuram,thiruvalluvar nearest
    Call9751212261

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி