இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு 1.6.2012 தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதன்படி1.6.2014 தகுதி நாளாக அறிவுறுத்தப் பட்டது.ஆனால் கடந்தாண்டில் பங்கேற்றோர் இந்தாண்டு பங்கேற்க முடியாத நிலையுள்ளது.2013-14ம் கல்வியாண்டு தாமதமாக ஜூன் 17ல் கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.மதுரை மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 2012-13 கல்வியாண்டு தாமதமாக கலந்தாய்வு நடந்தது.
அதற்காக 2014ல் நடந்த கலந்தாய்வில் ஜூன் முதல் தேதி குறிப்பிடாமல் 'சிறப்பு தகுதி நாள்' அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கு அதுமாதிரி அறிவிப்பு இல்லை. இதனால் கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது. பதவி உயர்வு பெறுவதில் பிரச்னை இல்லை. மூன்று கல்வியாண்டு என்ற நிபந்தனை ஓராண்டாக குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இரண்டு ஆண்டுகள் பங்கேற்க முடியாது. இது கல்வித்துறையின் நூதனமான முடிவு என்றார்.
மிகவும் குழப்பங்களை கொண்ட அறிவிப்பு ......
ReplyDeleteWat about 1st sep 2014 appointed pg teachers?
ReplyDeleteYes. Everyone have same doubts..
ReplyDeleteWhatever may be 2014 sep 26 appointed teachers are disappointed
ReplyDelete