நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துவதால் உருவாகும்-உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2015

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துவதால் உருவாகும்-உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்..

இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை கூடுதல் பணியிடமாக உருவாக்கி, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகின்றன.அது மட்டுமின்றி, புதிய உயர்நிலைப் பள்ளி உருவாகுவதன் மூலமும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகின்றன.


ஒரு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் போது, வகுப்பு 1-5 வரை தனியாகவும்,வகுப்பு 6-10 வரை தனியாகவும் பிரிக்கப்படுகிறது.


வகுப்பு 1-5 ல் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில்,ஒரு பணியிடம் ரத்து செய்யப்பட்டு , ஒரு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படுகிறது.அந்த நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் ( புதிய பணியிடம் ) தரப்படுகிறது. இடைநிலை ஆசிரியருக்கு பணியிடம்...?

எனவே 1 புதிய உயர்நிலைப் பள்ளி உருவாகினால்,1 இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரியாகிறது. தமிழகத்தில் தற்போது 5771 உயர்நிலை&மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளியில் இருந்து,படிப்படியாக உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் இதுவரை படிப்படியாக 5771 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொடக்கக் கல்வித்துறையில் உபரியாகி விட்டன.


*புதிய உயர்நிலைப் பள்ளியை உருவாக்கும் போது, வகுப்பு 1-5 ல் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல், தனியாககூடுதல் பணியிடமாக, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி