பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2015

பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம்.

இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது.


இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசையை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.


காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ₹500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை. மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பணி ஓய்வு பெறுவது இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளது? மூன்று ஆண்டு பணி துறப்பிற்க்குப் பின் எத்தனை ஆண்டுகளில் பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது? பதவி உயர்வு நிலை களில் தேர்வு நிலை /சிறப்பு நிலை வாய்ப்புகள்? அடுத்த பட்டதாரி ஆசிரியர் /நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்புகள்? அடுத்த ஊதியக்குழு ஊதியம் வித்தியாசங்கள்? இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். 5வது ஊதியக்குழுவில் பதவி உயர்வுக்க்கு 5% கூடுதலாக கொடுத்து 3 ஊதிய உயர்வு வரை கூடுதலாக பெற்றோம். இடைநிலை ஆசிரியர் தேர்வு நிலை +ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலம் சேர்த்து தலைமை ஆசிரியர் நிலையில் தேர்வு நிலை பெற்று வந்தோம். இன்றைக்கு இவற்றை இழந்து உள்ளோம். ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி இழந்த பலன்களைப் பெற தொடர் முயற்சி வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி