அஞ்சலக சேமிப்பு கணக்குடையவர்கள் ஏடிஎம்முக்கு விண்ணப்பிக்கலாம்: மண்டல அஞ்சல் தலைவர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

அஞ்சலக சேமிப்பு கணக்குடையவர்கள் ஏடிஎம்முக்கு விண்ணப்பிக்கலாம்: மண்டல அஞ்சல் தலைவர் தகவல்

அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:


சென்னையில் தியாகராய நகர், மயிலாப்பூர், அண்ணா சாலை, பரங்கிமலை, தாம்பரம் ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்களில் அஞ்சலக ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் போதிய அளவு பணம் எப்போதும் உள்ளது.அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், மேற்கண்ட ஏடிஎம் மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் நிலையத்தில் ஏடிஎம் கார்டுக்காக விண்ணப்பிக்கலாம். ஏடிஎம் கார்டு பயன்படுத்துவதற்கு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 இருப்பு இருக்க வேண்டும்.இவ்வாறு மெர்வின் அலெக்சாண்டர் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி