2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு

2015 முதல் 2018 வரை அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப் பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு கமிட்டி அறிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைப்படி தனியார் பள்ளிகளுக்கு அவற்றின் அடிப் படை வசதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு கல்விகட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.அந்த வகையில், 2015-16, 2016-17, 2017-18 ஆகிய 3கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக (அரியலூர், புதுக் கோட்டை, தூத்துக்குடி தவிர) பள்ளிகளுக்கான கட்டண விவரம் தமிழக அரசின் இணையதளத்தில்(www.tn.gov.in) நேற்று வெளி யிடப்பட்டது. எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையில் கல்வி ஆண்டு வாரியாக குறிப்பிட்ட தனியார் பள்ளிகளுக்கான கட் டண விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள் ளலாம்.


எல்கேஜி-க்கு ரூ.46,948.


சென்னை மாவட்டத்தில் 76 தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, எல்கேஜி படிப்புக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5900, அதிகபட்ச கட்டணம் ரூ.46,948 ஆகும். பிளஸ் 2 படிப் புக்கு குறைந்தபட்சம் ரூ.3500-ம் அதிகபட்சம் ரூ.52,393-ம் கட்டண மாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி