மாணவர்கள் அறிவியல் விழிப்புணர்ச்சி பெற வேண்டும்தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2015

மாணவர்கள் அறிவியல் விழிப்புணர்ச்சி பெற வேண்டும்தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேச்சு

அணு யுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள் ஓவிய போட்டி
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார்.ஏழாம் வகுப்பு மாணவி தனலெட்சுமி மற்றும் 3ம் வகுப்பு மாணவி காயத்ரி ஆகியோர் அறிவோம் அறிவியல் பற்றி பேசினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கைமாவட்ட செயலர் ஜீவானந்தம் ஹிரோஷிமா,நாகசாகி தினத்தை முன்னிட்டுஅணு யுத்தத்தால்அகதிகளாய் குழந்தைகள் என்கிற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியை துவக்கி வைத்துசிறப்புரையாற்றி பேசுகையில் , ஹிரோஷிமா,நாகசாகி அணுகுண்டு பாதிப்பு குறித்தும்,தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்தும்,சமாதன புறா தொடர்பாகவும்,மாணவர்களிடையே அதிகமான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக பேசினார்.


பள்ளி அளவிலான இப்போட்டியில் 8ம் வகுப்பு மாணவி தனம் முதல்பரிசையும்,7ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி இரண்டாம் பரிசையும் ,7ம் வகுப்பு மாணவி சுமித்ரா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி