பணிநிரவல் செய்வதால் பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

பணிநிரவல் செய்வதால் பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம்

நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால் கலக்கமடைந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது 6முதல் 8 ம் வகுப்பு வரை 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கிட வேண்டும்.அப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 170 உபரி பணியிடங்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்களை பணிநிரவல் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. துாரம் அதிகமுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுவார்களோ என்று பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் சங்க செயலாளர் குமார் கூறியதாவது:ஏற்கனவே குறைவான ஊதியத்தில் பணிபுரிகிறோம். அதிக துாரம் உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தால் பயண செலவு அதிகரிக்கும். துாரத்தை கணக்கிட்டு பணியிடம் வழங்க வேண்டும், என்றார்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “முடிந்தவரை பகுதிநேர ஆசிரியர்களை துாரம் குறைந்த பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

1 comment:

  1. M.Phil / Ph.D
    Regular / Part Time
    Admission for Govt University
    Contact :
    SRI ANNAMALAIYAR EDUCATIONAL TRUST
    Gudiyattam, Vellore Dt.
    9566572757 / 9500838334

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி