Aug 11, 2015
வாழ்க்கையின் உறக்கத்தை பல நாட்களாய் தொலைத்துவிட்டு உறக்கமின்றி சாதிக்க துடிக்கும் இளைய ஆசிரியர் சமுதாயமே. ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் வெற்றி பெற்று இன்று வேலை வரும் நாளை வேலை வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களே உங்கள் கனவை மட்டும் இழந்துவிடாதீர்கள் தொடர்ந்து கனவு காணுங்கள் . நிச்சயமாக ஒரு நாள் கனவு நினைவாகும். தினம் தினம் அருகாமையில் உள்ளவர்கள் , டீ கடையில் இருந்து டிபன் கடைகரர்கள் வரை வேலைக்கு செல்லவில்லையா என கேள்வி கேட்பதும். உறவினர்களின் விழாகளுக்கு கூட செல்லமால் மனதிற்குள் புழுங்குவதும். உங்களுக்கு வேலை இல்லை என்பதால் மனப்பெண் முதல் மனமகன் வரை மாறுவதும். அனுதினமும் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
தினமும் நம் அருகாமையில் உள்ள ஆசிரியர்கள் வேலைக்கு செல்லும் போது நாமும் இப்படி சென்று மாணவர்களுக்கு நமது முழு திறமையையும் வெளிப்படுத்த மாட்டோமோ என்ற எண்ணம் நம் அனைவரின் கண்ணில்
கானல் நீரைய் பெருகிறது. அவை வெளிவருவதில்லை. வயது செல்கிறது .வாலிபம் மறைகிறது என ஒரு தரப்பினர் குமுறல். அவர்களின் குழந்தை வளர்வது போல் நரைமுடியும் வளர்கிறது என்று இன்னும் ஒரு தரப்பினர்.
காலங்கள் கடந்து செல்கிறது மீண்டும் ஒரு வாழ்க்கை வரபோவது இல்லை இருக்கின்ற காலத்தில் எப்படியும் ஆசிரியர் ஆகிவிடலாம் என்று எண்ணி போராடும் நண்பர்களே விவேகானந்தர் கூற்றுப்படி நீங்கள் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள் என்பது உண்மை. நிச்சயம் நடக்கும் .
போராட்டம் இல்லாமல் எந்த ஒரு வெற்றியும் நிகழ்ந்தது இல்லை தோல்வி இல்லாத வெற்றி சரித்திரம் ஆனது இல்லை. இன்று இரவாகலாம் நாளை விடியும். தன்னம்பிக்கையின் தனி அடையாளம் நீ. நம் உள்ளுக்குள் இருக்கும் ஆற்றல் பொறியாய் கிளம்பும் நேரம் இது . வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இழக்க கூடாதது நமது தன்னம்பிக்கை அதை மட்டும் இழந்துவிடாதீர். போர்களத்தில் போர் வீரனின் வீரம் வெற்றியை வெல்ல அவன் வாள் எடுத்து வீசும் வேகத்தை விட பல மில்லியன் மடங்கு தன்னம்பிக்கை என்ற செங்குருதி ஒவ்வொரு நிமிடமும் நமது உடலில் வெறியாய் ஓட வேண்டும்.
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னம்பிக்கை தளிர் விட்டு மரமாகியுள்ளது. வாழ்க்கையின் பாதை குறுகலானது விடை தெரியாத கேள்வி தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்ட உங்களால் தன்னம்பிக்கை தான் நமது தாரக மந்திரம் என்பதை கண்டிப்பாக உணர்ந்துள்ளீர்கள் எனவே விரைவில் நாம் ஆசிரியராக இந்த சமுதாயத்தில் மலர்வோம்....
நன்றி
நம்பிக்கையுடன்
கார்த்திக் பரமக்குடி
Recommanded News
Related Post:
22 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Super.....
ReplyDeleteஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறோம் கார்த்தி. நல்ல நம்பிக்கை ஊட்டும் பதிவு வாழ்த்துக்கள்
Deletethat's absolutely correct.... we can hope still our success
DeleteBest of luck
ReplyDelete100% nice article.
ReplyDeleteநல்லவர்களை கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை நம்பிக்கையோடு இருங்கள் நல்வழி பிறக்கும்
ReplyDeleteநல்லவர்களை கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை நம்பிக்கையோடு இருங்கள் நல்வழி பிறக்கும்
ReplyDeleteSuper....
ReplyDeleteSupreme courtaal 5% raththu seiyapattaal 82 muthal 89 matheppen petravarkalin appointmentai raththu seithu vidapigeraarkala eanna? Ponga sir...
ReplyDeleteThanks karthik sir tis article gives me confidence
ReplyDeletePositive aproach. Nice and good...
ReplyDeleteகனவு என்பது தூக்கி வருவது இல்லை உன்னை தூங்க விடாமல் செய்வது என்று கலாம் அவர்கள் வாக்கு நம் மனதில் ஆழமாகப் பதிந்து வைத்து உழைத்தால் வெற்றி நிச்சயம்
ReplyDeleteNam kanavu vitril mudium.thank u karthik.
ReplyDeleteSir neengal solvathellam sari.....nanum ithanai nal muyyaarchi seithu konduthan irundhen...but enaku bd luck....ethanai padi
ReplyDeleteஉன்னால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் கடவுள் உன்னிடம் தருவதில்லை. உன்னால் முடியும்.
ReplyDeleteGod only knows about my life.. soo sad.. my mistake is i hav passed with gud mark in tntet..
ReplyDeleteGod is Grate But Man is Perfect
ReplyDeleteNice article. Thanambikkai ennum vithi uonriyatharku mikka nanri thola.naaltha nadakkum.
ReplyDeleteThannambikkai erunthal mattume muyarchi ennum puthiya uyiroottam nammil thondrum
ReplyDeleteall the best friend....
ReplyDeleteElection 2016ku makkalai ready pannunga, tasmac.ka tet.ZANU paathiduvom!
ReplyDeleteParliament election space kadharanen, evanum kekala. Ipavathu unga friends and relation kits unga problem. A solli prachaaram pannunga! I am waiting!
ReplyDelete