மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின்: சுகாதாரத்துறை ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2015

மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின்: சுகாதாரத்துறை ஏற்பாடு

மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.தமிழக சுகாதாரத்துறை மூலம் 6ம் வகுப்பு முதல் கல்லுாரி செல்லும் மாணவிகள் வரை இரண்டு மாதத்திற்கு மூன்று நாப்கின்கள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.


இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிகள் மூலமும், தனியார்பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் இந்நாப்கின்கள் வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்படும் நாப்கின்களைபயன்படுத்துவதில் மாணவிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பெல்டுடன் கூடிய நாப்கின்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரி,“ தற்போதைய நாப்கின்களை பயன்படுத்துவதில் சிறுமிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு இடுப்பை சுற்றி அணியும் படியான பெல்டுடன் கூடிய நாப்கின் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி