வரலாற்றில் முதல்முறையாக பென்சன்நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்யதிட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2015

வரலாற்றில் முதல்முறையாக பென்சன்நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்யதிட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஈக்விட்டி சந்தைகளில் பென்சன் நிதி முதலீடு செய்யப்படுவது 64 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் ஆணையர் கே.கே.ஜாலன் தெரிவித்தவை பின்வருமாறு:-


நடப்பு நிதியாண்டு முதல் வரும் மார்ச் 2016 வரை இந்திய பங்குச்சந்தைகளின் இரண்டு முக்கிய குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப்.பண்டுகளில் பென்சன் நிதியை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனினும்,பங்குச்சந்தை அபாயத்தை குறைப்பதற்காக முதற்கட்டமாக ஈ.டி.எப். வழியாகவே முதலீடு செய்யப்படுகிறது.


இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் கிடைக்கும் வருவாயை பொறுத்து ஈக்விட்டி சந்தையில் அதிகமாக முதலீடு செய்வது பற்றி ஆலோசிக்கப்படும்.இவ்வாறு கே.கே.ஜாலன் தெரிவித்தார்.ஈ.பி.எப்.ஓ. நிறுவனம் தற்போது ரூ.8.5 டிரில்லியன் சேமிப்பு பணத்தை அரசு பத்திரங்கள் வாயிலாக நிர்வகித்து வருகிறது. ஏற்கனவே, புதிய பென்சன் நிதி பணத்தில் 5 சதவீதத்தை ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்ய இருப்பதாகமத்திய அரசு அறிவித்திருந்தது.


இவற்றில் 3-ல் ஒரு பகுதியை தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப். பண்டுகளிலும், மீதமுள்ளவை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப். பண்டுகளிலும் முதலீடு செய்யப்படும்.நடப்பு ஆண்டின் நிலவரப்படி, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் 3.7 சதவீதமும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 2.9 சதவீதமும் கடந்த ஆண்டை காட்டிலும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி