அக்.1 முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவை: பி.எஸ்.என்.எல். லில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2015

அக்.1 முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவை: பி.எஸ்.என்.எல். லில் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். இணையதள சேவையை, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளதுஇதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பி.எஸ்.என்.எல், குறைந்தபட்சம் 512 கே.பி.பி.எஸ்.(ஓக்ஷல்ள்) வேகத்தில் இணையதள சேவையை வழங்கி வருகிறது.


அதிக வாடிக்கையாளர்களை கவர, தனது இணைய தள சேவையின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, பி.எஸ்.என்.எல். நிறுவன இணையதள சேவையின் வேகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2எம்பிபிஎஸ் அதிவேகத்தில் இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கும். எந்தவிதமான கூடுதல் கட்டணம் இன்றி, அதிக வேகத்தில் இணையதள சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


புதியத் திட்டம் அறிமுகம்:


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், -புது வசந்தம்- என்கிற புதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் (ப்ண்ச்ங் ற்ண்ம்ங் ஸ்ஹப்ண்க்ண்ற்ஹ்) வசதியைப் பெற முடியும்.விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை (செப் 17) முதல் திட்டம் அறிமுகமாகிறது. திட்டத்தில் உள்ளூர், வெளியூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு 80 பைசா வசூலிக்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு, 1,000 வினாடி அளவுக்கு இலவச அழைப்பு கிடைக்கப்பெறும். மூன்று மாதங்களுக்கு, மாதத்துக்கு 25 என்ற அளவில் குறுஞ்செய்தி, 50 எம்.பி அளவுக்கு ஒரு மாதம் இணையதள வசதி ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 15 செலுத்தினால் போதுமானது (சிம் கார்டு கட்டணமும் அடங்கும்). கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. good after noon sir,
    sir my name is sudha.S
    I wrote Groups 2 (int) and Lab assistant exams and when will its result publish sir pl intimate result dates sir pl
    thank you sir

    ReplyDelete
  2. group 2 இந்த மாத இறுதியில் முடிவுகள் வெளிவருகிறது

    ReplyDelete
  3. 1 GB வரை தான் பிறகு 512 kbps ஆக மாறிவிடும் பெரிதாக பலன் அளிக்க போவது இல்லை மாதத்தின் முதல் 3 நாட்கள் அல்லது பயன்படுத்துவதை பொறுத்து ஒருவாரம் வரை அதிகவேகமாக இருக்கும் பிறகு பழையபடி தான் 1mbps மேல் போட்டிருக்கும் நபர்களுக்கு 6 GB வரை 2Mbps வேகம் இருக்கும் 15 நாட்கள் வரை அதிகவேகமாக இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி