உலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு293-ஆவது இடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2015

உலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு293-ஆவது இடம்

உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த தரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்வி நிறுவனங்களில், மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.


உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் இதுவரை இடம்பெறாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான"க்யூ.எஸ்.' உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இரண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 147-ஆவது இடத்தையும், தில்லி ஐஐடி 179-ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.இதற்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 202-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 254-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 271-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 286-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 391-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 451-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.


இதுபோல் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் அடிப்படையில் "க்யூ.எஸ்'. வெளியிட்டுள்ள உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகமும் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது.இந்தப் பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பட்டியலில் உலக அளவில் 44-ஆவது இடத்தை தில்லி ஐஐடி பிடித்துள்ளது.அதனைத் தொடர்ந்து மும்பை ஐஐடி 52-ஆவது இடத்தையும், சென்னை ஐஐடி 72-ஆவது இடத்தையும், காரக்பூர் ஐஐடி 90-ஆவது இடத்தையும், கான்பூர் ஐஐடி 95-ஆவது இடத்தையும், ரூர்கி ஐஐடி 137-ஆவது இடத்தையும், தில்லி பல்கலைக்கழகம் 268-ஆவது இடத்தையும், குவாஹாட்டி ஐஐடி 284-ஆவது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியதாவது:உலக தலைசிறந்த பொறியியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 293-ஆவது இடத்தைப் பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது.அதிலும், உலக அளவில் மெக்கானிக்கல், ஏரோநாட்டிகல், உற்பத்தி பொறியியல் பிரிவுகளின் கீழ் க்யூ.எஸ். வெளியிட்டுள்ள உலக தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.


இந்தப் பட்டியலில் குவாஹாட்டி ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பிறகே வருகின்றன.இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே இந்தியப்பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம்தான். இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள்,ஆராய்ச்சி மாணவர்களின் நிர்வாகிகளின் தீவிர முயற்சியே காரணம்.இது புதிய உத்வேகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அளித்துள்ளது. அடுத்ததாக200 இடத்துக்குள் வருவதற்கான முயற்சியை பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் என்றார்.

1 comment:

  1. Varum kalangalil innum sirappane munnetram perum. Nam manavarhal ulagin siranthe poriyalarhalahe Vetri peruvarhal.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி