‎ஆசிரியர்தின‬ சிறப்பு பதிவு- 11 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தாயுள்ளம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

‎ஆசிரியர்தின‬ சிறப்பு பதிவு- 11 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தாயுள்ளம்!

சிலர் பாடம் எடுக்கும் விதத்திற்காகவே அவர்களை நமக்கு பிடித்து போய் இருக்கும்.சிலரை அதற்காகவே பிடிக்காமலும் போய் இருக்க கூடும்.
நமது தமிழகத்தில் பெரும்பாலும் ஆசிரியருக்கு என்று ஒரு சிறப்பு மரியாதை இருந்து வருகிறது.


தனியார் பள்ளிகளில் Vs அரசு பள்ளிகள்ஆசிரியர் ஊதியம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து இந்த ஆசிரியர் துறையில் மட்டும்தான் ஊதிய வேறுபாடு மிக அதிகம். அதற்கான காரணம் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. என்னை கேட்டால் ஆசிரியர் என்றவுடன் கண்ணம்மா டீச்சர் ஞாபகம் வர பல காரணம் உண்டு(அவரை பற்றி பிறகு பார்போம் ) என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு சுகந்தி என்ற டீச்சர் என்னை மிகவும் பாதிப்படைய செய்து விட்டார்.அவர் வேறு யாரும் அல்ல.

வேதார்ணயம் பள்ளி பஸ் விபத்தில் பள்ளி குழந்தைகளைகாப்பாற்ற முற்பட்டு உயிர் இழந்த அந்த பெண் தான். இந்த தியாகத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பட்டு உள்ளது.அவருக்கு நல்லாசிரியர் விருதும் கூட வழங்கி இருக்கலாம்.அவர் 11 குழந்தைகளை காப்பாற்றி உள்ளதாக சொல்ல படுகிறது.அவர் குழந்தைகளை காப்பாற்றும் போது தனது job description படி இதை நான் செய்ய வேண்டுமா என்று யோசித்து இருக்கமாட்டார் என்றே எனக்கு படுகிறது.எப்படியோ அவர் காப்பாற்றிய குழந்தைகளில் ஒருவராவது அவர் கடைசியாய் சொல்லி கொடுத்த ஆபத்தில் உதவுவது என்பதை அவர்கள் வளர்ந்த பின்னர் உணருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நம்மால் செய்ய முடியாதை செய்யும் யாரும் ஹீரோ தான் ... அப்படி பார்த்தால் இந்த சுகந்தியும் ஒரு ஹீரோ தான்.. பாடம் கற்று கொடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியர் என்றால் எல்லாரும் எல்லாருக்கும் பாடம் கற்று கொடுத்து கொண்டு இருக்கும் இவரைப்போன்ற ஆசிரியர் அனைவருக்கும்"ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்".

10 comments:

 1. அவரின் அன்புள்ளத்திற்கும் தியாகத்திற்கும் தலைவணங்குகிறேன்.

  ReplyDelete
 2. அவரின் அன்புள்ளத்திற்கும் தியாகத்திற்கும் தலைவணங்குகிறேன்.

  ReplyDelete
 3. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்
  ராஜேஸ்

  ReplyDelete
 4. தலை வணங்குகிறோம்

  ReplyDelete
 5. தலை வணங்குகிறோம்

  ReplyDelete
 6. தலை வணங்குகிறோம்

  ReplyDelete
 7. Salute the great teacher suganthi

  ReplyDelete
 8. Happy teachers day by Pg asst ghss thirumalpur

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி