தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் 189 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்; அமைச்சர் காமராஜ் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2015

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் 189 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்; அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் உள்ள 189 காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.


காலிப் பணியிடம்


தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்கு அலுவலகங்களில் காலியாக உள்ள 77 உதவியாளர் மற்றும் துணை சேமிப்புக் கிடங்கு மேலாளர், 34 அலுவலக உதவியாளர், 78 காவலர் என மொத்தம் 189 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.


தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் தானியங்களை பூச்சிகளின்றி பாரமரிக்க முதற்கட்டமாக 54 கிடங்குகளில் 162 நவீன புற ஊதா ஒளிப்பொறிகள் வைக்கப்படும்.நெடுஞ்சாலை உணவகங்களிலும், வணிக நிறுவனங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் மற்றும் பொருட்கள், அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் விற்கப்படுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.


இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி