சட்டப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2015

சட்டப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி

மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நிறைவுற்றது. தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,252 இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களுக்கு ஒரு வாரத் துக்குள் இரண்டாம் கட்ட கலந் தாய்வு நடைபெறும்என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.


அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் 1,252 இடங்கள் உள்ளன. இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இந்த இடங்களுக்கு சுமார் 7ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கு கடந்த புதன் கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கடைசி நாளான நேற்று325 பேர் அழைக் கப்பட்டிருந்தனர். இதில் 250 பேர் பங்கேற்றனர் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி