துணை மருத்துவப் படிப்பு: 3,010 காலியிடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2015

துணை மருத்துவப் படிப்பு: 3,010 காலியிடங்கள்

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முடிவில் 3,010 காலியிடங்கள் ஏற்பட்டன. பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம், ஆக்குபேஷனல் தெரப்பி ஆகிய படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்கியது.


இந்தக் கலந்தாய்வுக்கு 569 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 283 பேர்கலந்தாய்வில் பங்கேற்றனர். முதல்நாள் கலந்தாய்வின் முடிவில் 203 பி.எஸ்சி. செவிலியர் இடங்கள் உள்பட மொத்தம் 275 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் உள்ள 3,010 இடங்களுக்கு தொடர்ந்து செப்டம்பர் 15 (செவ்வாய்க்கிழமை), 16, 18, 19 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்குக் கலந்தாய்வு தொடங்கும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி