அஞ்சல் துறையில் 143 தபால்காரர் பணியிடம் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2015

அஞ்சல் துறையில் 143 தபால்காரர் பணியிடம் காலி

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 143 தபால்காரர்கள் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் 142 தபால்காரர்கள் உட்பட 143 பணியிடங்கள் காலியாக உள்ளன.


இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 27 வயது வரை.மாற்றுத்திறனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு விதிமுறைகளின் படி வயது வரம்பில்தளர்வு உண்டு. எழுத்து ேதர்வு உண்டு.


விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய்.தேர்வுக் கட்டணம் 400 ரூபாய். மாற்றத்திறனாளிகளுக்கு, எஸ்சி/எஸ்டி பிரிவினர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பிக்கவும் www.dopchennai.in என்ற இணையதளத்தைபார்க்கவும். விண்ணப்பங்களை 04-10-2015ம் தேதி இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி