'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2015

'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு

இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன-.இதற்காக பள்ளி அள வில், 'மைக்ரோசாப்ட் ஐ.டி., அகாடமியை' துவக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 'வெலாசஸ் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், வெலாசஸ் கன்சல்டிங் தலைமை நிர்வாக அதிகாரிசங்கரன்செட்டூர், இத்திட்டத்தை துவங்கி வைத்தார்.அவர் கூறியதாவது:உயர்க்கல்வியில் கற்கும் கணினி தொடர்பான பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். நாம் கணினி-, 'சாப்ட்வேர்'களை பயன்படுத்தி வருகிறோம்; ஆனால், அவற்றை உருவாக்குவோராக இருப்பதில்லை. 'சாப்ட்வேர்' உருவாக்குபவர்களாக மாணவர்களை மாற்ற உள்ளோம்.இதற்காக, இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் உதவியுடன் கணினி கல்வி வழங்க முடிவெடுத்துள்ளோம். இதில் மற்ற நிறுவனங்களின் 'சாப்ட்வேர்' குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.உலக அளவில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் இந்த கல்வியை வழங்கி வருகிறது. இதில், ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். உயர்க்கல்வி, வேலைவாய்ப்புக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.'மைக்ரோசாப்ட்' மென்பொருளின் பதிவேற்றங்கள் குறித்த பயிற்சி உடனுக்குடன் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி