முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகள்; முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகள்; முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகளையும் முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.

உயர் கல்வித்துறை சாதனை


தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு 110 விதியின் கீழ் கல்வித்துறைக்கு என்று 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அனைத்து அறிவிப்புகளை எல்லாம் இந்த ஆண்டு சட்டசபையில் மானிய கோரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னால் நிறைவேற்றும் நோக்கோடு தமிழக அரசின் உயர் கல்வித்துறைமுழுவீச்சில் செயல்பட்டது.உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர் அதிகாரிகள் அனைவரும் அடிக்கடி ஆய்வு கூட்டம் நடத்தி ஒவ்வொரு அறிவிப்புகளும் எந்தெந்த நிலையில் இருக்கிறது என்று கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். சட்டசபையில் உயர் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள நிலையில் அனைத்து அறிவிப்புகளும் முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் வருமாறு:-

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

* தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 14 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

* கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கிலும், எளிதில் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த புதிய பாடப்பிரிவுகளுக்கென 1,924 ஆசிரியர் பணியிடங்களும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் 10,204 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

* புதிதாக திறக்கப்பட்ட 12 அரசு கல்லூரிகளில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் பொருட்டு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முறையான காலிப்பணியிடங்களில் 1,007 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,272 உதவி பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்பப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பள மானியம்

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய இயலாது என்ற அடிப்படையிலும், அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கிலும் 55 சுயநிதி கலை மற்றும் அறிவியல்கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசால் சம்பள மானியம் வழங்கப்படுவதால் அக்கல்லூரிகளில் 1,237 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு கல்லூரி கல்வி இயக்குனரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4 அரசு பொறியியல் கல்லூரிகள்

* அதிக அளவில் மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கு மேலாக அதிகரித்துள்ளது. இக்கல்லூரிகளில் 3,550 மாணவர்கள் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். 11 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கு மேலாக அதிகரித்துள்ளது. இக்கல்லூரிகளில் 4,315 (2013-14, 2014-15) மாணவர்கள் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்.
* மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் பொருட்டு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசு பொறியியல்மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 287 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரிகளில் 796 உதவி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘ராக்கிங்’ குறைந்தது

* பொறியியல் கல்லூரிகளில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு 2011-12-ம் ஆண்டு முதல் 2014-15 வரை கல்வி கட்டணத்தை திரும்ப அளிக்கும் வகையில் ரூ.2014.07 கோடி வழங்கப்பட்டு 10,54,753 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.* உயர் கல்வி நிறவனங்களில் ‘ராக்கிங்’ நடவடிக்கைகள் கல்லூரி முதல்வரால் கண்காணிக்கப்பட்டு பெருமளவில் அந்நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. then Polytechnic Recruitment irukuma?????????????????

    ReplyDelete
  2. Anyone reply pls....when will be the TRB Polytechnic exam..

    ReplyDelete
    Replies
    1. No one know exactly...it is time to expect anytime.

      Delete
  3. Wen will be the recruitment of 1227 arts science asst prof?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. When will they recruit for the post of assistant professor engineering college

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி