ஆசிரியர்களுக்காக 'மொபைல் ஆப்': ம.பி.-யில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2015

ஆசிரியர்களுக்காக 'மொபைல் ஆப்': ம.பி.-யில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக தம் மாநில ஆசிரியர்களுக்காக ஒரு 'மொபைல் ஆப்' மத்தியப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


'எம் ஷிக்ஷா மித்ரா (கைபேசி கல்வி நண்பன்)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப், அவர்களுக்கு பணி நிமித்தமான விஷயங்களில் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆப் மூலமாக ஆசிரியர்கள் தம் சம்பள ரசீது, பல்வேறு அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிதி, மாணவர்களுக்கான உதவித்தொகை, சுற்றரிக்கைகள் உட்படப் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

'கூகுள் பிளே ஸ்டோர்'-ல் உள்ள இந்த ஆப்-ஐ ஆசிரியர்கள் தம் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம், மபி மாநிலத்தின் பள்ளி ஆசிரியர்கள், தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோரின் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.இதன்மூலம் அவர்களுடன் மாதம் ஒன்றுக்கு 200 குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த ஆப் இல் மேலும் பலவசதிகள் செய்யப்பட்டுள்ளது.மபியின் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் முதல்வர்கள் அனைவரும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தம் எண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி