இந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரும் மனுசுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2015

இந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரும் மனுசுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை பயிற்றுமொழியாகவும் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர்சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.


அவர் தனது மனுவில், 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தி மொழியை பயிற்றுவிப்பதன் மூலம் நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், இந்தியை பள்ளிகளில் கட்டாயமாக்கினால் மட்டுமே கல்வி உரிமை சட்டத்துக்கு அர்த்தம் இருக்கும் என்றும், மேலும் இது நாடு முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் கூறி இருந்தார்.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், அமிதவ ராய் ஆகியோர் நேற்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி