2016-இல் பொறியியல் முடிப்பவர்களில் 600 பேருக்கு இலவசத் திறன் பயிற்சி: அண்ணா பல்கலை. ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2015

2016-இல் பொறியியல் முடிப்பவர்களில் 600 பேருக்கு இலவசத் திறன் பயிற்சி: அண்ணா பல்கலை. ஏற்பாடு

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளில் வருகிற 2016-இல் படிப்பை முடிப்பவர்களில் 600 பேருக்கு இலவசமாக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் அளிக்க உள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில் கூட்டுறவு மையமும், "ரெனால்ட்நிஸ்ஸான்' தொழில்நுட்ப வர்த்தக மையம் என்ற இந்திய தனியார் நிறுவனமும் இணைந்துஇந்தப் பயிற்சித் திட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:"விஷன் தமிழ்நாடு 2023' திட்டம் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில்முதலீடு செய்து வருகின்றன.இதனால், பயிற்சிபெற்ற திறன்மிக்க மனித ஆற்றலின் தேவை அதிகரித்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம், ரெனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்ப வர்த்தக மைய நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளில் இயந்திரவியல், ஆட்டோமொபைல், உற்பத்தி, மெட்டாலரஜி உள்ளிட்ட துறைகளில் இருந்து 2016-இல் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


சென்னை, மதுரை, கோவை என மூன்று மண்டலங்களில், மண்டலத்துக்கு 200 பேர் வீதம் 600 பேருக்கு 10 நாள்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.அதுமட்டுமின்றி ரெனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்ப நிறுவனம், நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் 40 மாணவிகள், 20 மாணவர்கள் என மொத்தம் 60 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கஉள்ளது.மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 துறைகளில் பல்வேறு பொறியியல் பிரிவுகளின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் இறுதியாண்டு மாணவர்கள் 60 பேருக்கு மேம்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டமும் அறிமுகம் செய்யப்படஉள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி