குளம், கடலில் குளிக்க மாணவர்களுக்கு தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

குளம், கடலில் குளிக்க மாணவர்களுக்கு தடை!

'மாணவர்களை, நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடலில் குளிக்க விடக்கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக, அனுப்பப்பட்டுள்ளசுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


பள்ளி வளாகங்களை, குப்பை, கூளங்கள், புதர்கள், தேவையற்ற செடிகள் இன்றி சுத்தமாக பாதுகாக்க வேண்டும். மாணவ, மாணவியரை, குளம், குட்டை மற்றும் நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது;கடல் அருகில் இருந்தால், அங்கு குளிக்க விடக்கூடாது.பள்ளி வளாகத்தில் உயர்மின் அழுத்தக் கம்பி இருந்தால், அதை பத்திரமாக அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி மற்றும் குடிநீர்த் தொட்டி போன்றவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், ஒவ்வொரு பள்ளியிலும், கண்டிப்பாக முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். இதுதவிர, மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான, மற்ற பல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி