கடலூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை;மாணவர்களைக் கண்காணிக்ககுழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2015

கடலூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை;மாணவர்களைக் கண்காணிக்ககுழு

கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள்மத்தியில் ஜாதிய மோதல் தலை துாக்கியுள்ளது. இதனைத் தவிர்த்திட மாவட்ட நிர்வாகம்,போலீஸ் மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களிடையே ஏற்படும் சிறு,சிறு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே களைந்திட வசதியாக அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாவட்டத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்களிடையே அமைதியின்மையும்,ஓழுங்கீனமான செயல்களும் அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை தீவிரமாக கண்காணித்து அதற்குரிய பரிகாரங்கள் காண வேண்டியது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடமையாகும்.மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் துவக்கத்திலேயே கண்டறிந்து,அதனைக் களைந்து மாணவர்களை நல்வழிப்படுத்தவில்லை என்றால்,அதுவே சமூகத்தில் மிகப்பெரிய சம்பவங்கள் ஏற்பட காரணமாகி விடும்.மாணவர்களின் கற்றல் திறன் குறைதல் குறித்தும்,நடத்தை மாறுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களை நல்வழிப்படுத்த தனியாக கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்.மாணவர்களுக்குள் சிறு பிரச்னை ஏற்பட்டால்உடன்,சம்மந்தப்பட்ட மாணவரை விசாரணை செய்து,அவரது பெற்றோரை அழைத்து திருத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டிப்பாக செயல்பட வேண்டும். இக்குழுவில் தலைமை ஆசிரியர் தலைவராகவும்,உதவி தலைமை ஆசிரியர் செயலராகவும்,அனைத்து ஆசிரியர்களும் உறுப்பினர்களாக செயல்பட வேண்டும்.


மேலும்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் குறைந்தது இருவர் இக்குழுவில் உறுப்பினராக இடம் பெற வேண்டும்.ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒவ்வொரு மாதமும் இருமுறை மற்றும் தேவையின் அடிப்படையில் மாலை 4:30 மணிக்குப் பிறகு கூட்டி,பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளை விவாதித்து தீர்வு காண வேண்டும். இதற்கென பதிவேடுகள் உருவாக்கி நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்கள் தாமதமாக பள்ளி வருகை,தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருப்பது மற்றும் ஏதேனும் ஒழுங்கீன செயலில் மாணவர் ஈடுபட்டால் அதனை இப்பதிவேட்டில் பதிவு செய்து,அந்த செயலின் தன்மைக்கேற்ப மாணவரின் நடத்தை மாற்றத்தை சரி செய்யும் வகையில் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். அதனை வாரம்தோறும் திறந்து,ஏதேனும் புகார் இருந்தால் அதன் மீது ஒழுங்கு நடவடிக்கைகுழு விவாதித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தும்,தமிழ்நாடு கல்வி விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்திற்கும் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. மாணவர் சமுதாயம் எங்கே போகுது, ஆசிரியர் வேடிக்ககை பார்க்கும் நபராகிவிட்டார் தடுத்தால் பிரச்சனை ...............................

    பிஜ்னோர்: உத்தர பிரதேசத்தில், வகுப்பறைக்குள் புகுந்த முன்னாள் மாணவன் ஒருவன், மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம், முர்லிவாலா கிராமத்தைச் சேர்ந்தவன், சோனு குமார், 18; பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்து, பள்ளியில் இருந்து கடந்தாண்டு வெளியேறியவன். இவனுக்கு, அப்பள்ளியில் படிக்கும், 9ம் வகுப்பு படித்த, தலித் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    அவர்கள் ஒன்று சேர, ஜாதி தடையாக இருந்ததால், அந்த பெண், சோனுவுடன் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனு, திடீரென்று வகுப்பறைக்குள் நுழைந்துள்ளான். ஆசிரியர் அவனை தடுத்த போது, தலித் மாணவியின் கையில், 'ராக்கி' கயிற்றை காட்டி, 'சகோதரி' ஆக ஏற்றுக் கொள்ளப் போவதாக கூறியுள்ளான். அதை நம்பிய ஆசிரியர், அவனை அனுமதித்துள்ளார். அப்போது சோனு, மறைத்து வைத்திருந்த குங்குமத்தை திடீரென எடுத்து, அந்த மாணவியின் நெற்றியில் வைத்து, 'நீயே என் மனைவி' என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவியரும் மற்றும் ஆசிரியரும், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துமீறி, மாணவிக்கு குங்குமம் வைத்த சோனுவை, போலீசார் தேடி வருகின்றனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி