நாளை நடக்க இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2015

நாளை நடக்க இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பத்திரிக்கை விளம்பரம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு புதன்கிழமை (செப்டம்பர் 9) காலை 10 மணிக்குமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், தேர்வுக் குழுவினரால் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் யாரும் புதன்கிழமை (செப்டம்பர் 9) தேதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு வர வேண்டாம். அடுத்த நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி