அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2015

அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை.

மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2015 ஜூலை முதல் தேதியிலிருந்து அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தற்போது வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 113 சதவீதம் என்பதை 119 சதவீதமாக உயர்த்தி வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு மேற்படி அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். எனவே, இதற்கான உத்தரவை பிறப்பித்திடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. நீங்க கோரிக்கை வைக்க வில்லை என்றாலும் DA தானா வரும். அவங்க போடற நேரம் பார்த்து இவங்க வப்பாங்கலாம் அப்பறம் நாங்கதான் பேசி வாங்கி கொடுத்தோம்னு சொல்லிப்பாங்கலாம். பாத்துப்பா கட்டாய ஓய்வூதிய திட்டம் அமுலுக்கு வந்துட்டு. போராட்டம் அது இதுனு மாட்டிகிடாதீக சொல்லிபுட்டேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி