பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2015

பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங்கை விரைவில் நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதன் மாவட்ட நிர்வாக குழுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.


மாவட்டத் தலைவர் பாபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ராஜ்மோகன்,துணைத்தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜோசப்சேவியர் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட், தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியராஜன், துணைத்தலைவர் திருநாவுக்கரசு பேசினர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சிக்கான ஈடுசெய்யும் விடுப்பு வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை வழங்க முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டத்தை நடத்துவது, தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.

7 comments:

  1. உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு உண்டா இல்லையா

    ReplyDelete
  2. Anybody tell me Co BT counselling date

    ReplyDelete
  3. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

    ReplyDelete
  4. கலந்தாய்வு நடக்குமா நடக்காதா Admin

    ReplyDelete
  5. கலந்தாய்வு நடக்குமா நடக்காதா Admin

    ReplyDelete
  6. Any body wants to mutual transfer at chennai bt assit.history

    ReplyDelete
  7. Anybody willing to mutual transfer at chennai. M'y no 9003638902.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி