பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2015

பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்

பிஎட் மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக உயர்கல்விதுறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 672 பிஎட் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.


வரும் 10ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.விண்ணப்பத்தை ரூ.300 செலுத்தி பெற்று கொள்ளலாம். எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உரிய சான்றிதழை சமர்ப்பித்து ரூ.175 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரில் மட்டுமே பெற முடியும், தபால் மூலம் பெறமுடியாது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி “செயலர், பிஎட் மாணவர் சேர்க்கை 2015-2016, விலிங்டன் சீமாட்டி கல்வியல் ேமம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் இடங்களின் விவரம்:

* ைசதாப்பேட்டை கல்வியல் மேம்பாட்டு நிறுவனம்.

* விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி.

இதற்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.பி.இ., - பி.டெக்., படித்தோருக்கும், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.

3 comments:

  1. can you tell me the fees structure for B.Ed course?

    Advance thanks

    ReplyDelete
  2. One year or two year tell me sir

    ReplyDelete
  3. Pls tel me admin sir b.ed this year 1 year or two year

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி