TNPSC வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

TNPSC வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடில்லி:டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73 அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.கடந்த, 2000 - 2001ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், தேர்வில் முறைகேடு செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த தேர்வில் வெற்றி பெற்று, பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும், 73 அதிகாரிகளின் நியமனத்தை, ஐகோர்ட் ரத்து செய்தது; இந்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் இறுதி விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு மறுதேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி