கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்து 811 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்து 811 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆயிரத்து 811 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கர்நாடக கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


இன்னும் 2 நாட்களில்...கர்நாடகத்தில் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள்விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். உயர்நிலைப்பள்ளிகளில் 1,300 ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 9 ஆயிரத்து 511 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆகமொத்தம் 10 ஆயிரத்து 811 ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.ஒரு சிலர் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டுக்கும் தேர்வாகியுள்ளனர். அதனால் இன்னும் 2 நாட்களில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமன பட்டியலை வெளியிடுகிறோம். 10 நாட்களுக்கு பிறகு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமன பட்டியல் வெளியிடப்படும். மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி மற்றும் பி.யூ. கல்லூரிகளில் மொத்தம் 28 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


விரிவுரையாளர்கள் நியமனம்


முதல்கட்டமாக 13 ஆயிரம் ஆசிரியர்களின் நியமன பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டுக்குள் 2–வது கட்டமாக பணி நியமனம் செய்யப்படும். பி.யூ. கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் சில குழப்பம் உண்டானதால் அந்த நியமன பணிகள் தாமதம் அடைந்துள்ளன. ஆதிதிராவிடர்களுக்கு தகுதி மதிப்பெண் 55–ல் இருந்து 50 ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விதிமுறைகளில் உரிய திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


7–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. தற்போது நடைமுறையில் உள்ளபடியே தேர்வுகள் நடைபெறும். ஆனால் மாணவர்களின் கற்கும் திறனை அறிய ஆய்வு தேர்வு வருகிற ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு தேர்வு மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான அளவுகோல் கிடையாது. கற்றல் திறன் அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும்.மாணவர்களின் விடைத்தாள்கள் பெற்றோருக்கு வழங்கப்படும். அரசு பள்ளி குழந்தைகளுக்கு ‘ஷூ‘ வழங்குவதற்கான டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கிம்மனே ரத்னாகர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி