'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்

நெட் - நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற தேசிய திறனாய்வு தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்களுக்கு வழங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.


கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறவும், தேசிய அளவிலான, 'நெட்' தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.இத்தேர்வை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.ஜூன், 28ல் நாடு முழுவதும், 89 மையங்களில் நடந்த தேர்வில், தமிழகத்தைச்சேர்ந்த, 30 ஆயிரம் பேர் உட்பட, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


இதன் முடிவுகள், கடந்த, 28ம் தேதி வெளியிடப்பட்டன.வரும் டிசம்பர், 27ல் அடுத்த நெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு, நவம்பர், 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஜூனில் முடிந்த தேர்வுக்கான விடை திருத்தங்களில் சந்தேகம்உள்ளதால், அதன் நகல் வேண்டும் என பலர், சி.பி.எஸ்.இ.,க்கு மனு அளித்தனர்.இதையடுத்து, 'நகல் தேவைப்படுவோர், 'செயலர், சி.பி.எஸ்.இ., புதுடில்லி' என்ற பெயருக்கு, 500 ரூபாய்க்கான, டி.டி., எடுத்து, நவம்பர்,10க்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி